Tuesday, April 7, 2009

Exclusive ::: வன்னியில் 1000 பேர் இந்திய ராணுவத்தின் நச்சு வாயு தாக்குதலில் நேற்று படுகொலை..

வெளி உலகிற்க்கு தெரியாமல் மனித படுகொலை.....அனைத்து மக்களையும் கொன்றுவிட்டு விடுதலை புலிகள் மீது பழிபோட சதி..... விபரங்கள் விரைவில்............................. !!!!

சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது !

சிறீ லங்கா இராணுவத்தின் 58ம் 59படையணியை கொண்டு நடாத்தும் இந்திய இராணுவம்.

2008இல் சிறீ லங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 58ம் படையணி வலிந்த தாக்குதல் நடாத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு படையணி. இந்த படையணியே ப+நகரி, ஆனையிறவு, மற்றும் பரந்தன் ஏ35 பாதையில் புதுக்குடியிருப்புவரை தனது தாக்குதலை நடாத்தி வந்தது. இந்த படை அணி புலிகளின் தொடர் தாக்குதலால் தனது படைத்திறனை சிறுது சிறுதாக இழந்து கொண்டிருந்தது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற புலிகளின் பாரிய தாக்குதல்களால் இந்த படையணி முற்றாகவே சிதைந்து இதன் பல பிரிவுகளை இணைத்தே தனது தாக்குதலை சிறீ லங்கா இராணுவம் நடாத்தி வந்தது. தற்போது இதன் செயற்திறன் முற்றாக புலிகளால் அழிக்கப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படை பிரிவை சேர்ந்த பல படையினர் 58ம் படையணியில் முன்னணி தாக்குதலை நடாத்தும் படையணியாக செயற்படுகின்றனர். சிறீ லங்கா இராணுவத்தின் சீருடையில் புதியரக ஆயுதங்களுடன் இவர்கள் தற்போது செயற்படுவதாக விரக்தி அடைந்த சிறீ லங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தமிழ் நண்பருக்கு இந்த செய்தியை வவுனியாவில் வைத்து கூறியுள்ளார்.

58ம் படையணியை சேர்ந்த இந்த சிப்பாய் ஒரு தொற்று நோய்க்காக வவுனியாவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்திலேயே இந்த தகவல்களை கசிந்துள்ளார். தமது படையணியில் 58ஆம், 59ஆம் படையணி முற்றாகா சேதமாகி விட்டதாகவும் சிறப்பு தாக்குதல் அணியான 58அம் படைபிரிவில் பல டிவிசன்களில் முற்றாக இந்திய கொமாண்டோக்களும் 59ம் படையணியில் ஆ;ட்பலத்தை நிவர்த்திசெய்யும் வகையில் 50சதவீதமான இந்திய சிப்பாய்கள் இருப்பதாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இராணுவத்தை வழி நடாத்தும் அதிகாரிகளாக இலங்கை இந்திய ஓப்;பந்த காலத்தில் இந்திய இராணுவத்தில் படையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்ற சில அதிகாரிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.


Monday, April 6, 2009

ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே!  வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம். 

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு 
சாவின் விளிம்பில் உள்ள 
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

Sunday, March 29, 2009

புலிகள் அழிந்து விட்டார்களாம்...??

உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்?? பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம். புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்? அந்த அப்பாவிகள் யார்? இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி
‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க
இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப்பு வலய மக்கள்.




பாவம் உலகத்து மனிதாபிமான நடவடிக்கை நலன் விரும்பிகள்? என்ன செய்வார்கள் அவர்கள்? பயங்கரவாதம் ஒழிகிறது என்று நினைத்து முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். பயங்கரவாதம் அழிகையில் அப்பாவிகள் கொல்லப்படுவது நியாயம் என்று நிதானமாக நீண்ட சிந்தனையில் இருக்கிறார்கள். எது பயங்கரவாதம்? யாராவது விளக்கம் சொல்லுவீர்களா?? எவருக்காவது எது பயங்கரவாதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறத் தெரியுமா??



’பூதகிகள் பாலூட்ட வருகையில் முலையறுப்பதும், கடிக்க வரும் நாயை ஓட வைக்கக் கல் எடுத்து எறிவதும் , கொத்தவெனப் படமெடுக்கும் விசப் பாம்பைக் கொன்று போட நினைப்பதும் தான் பயங்கரவாதமோ? என்னய்யா வேடிக்கை இது? என்ன மனச்சாட்சி உள்ள உலகம் இது? என்ன மௌனித்துப் போய் விட்டீர்களா? கொஞ்சமாவது உங்கள் வாய்களைத் திறவுங்களேன்?? என்ன பயங்கரவாதம் பாதுகாப்பு வலயத்திற்குள்ளா புதைந்து கிடக்கிறது??



பாவம் எங்கள் உறவுகள்? அம்பலவண் பொக்கணையிலும், வலைஞர்மடத்திலும், புதுமாத்தளனிலும் பதை பதைக்கத், துடி துடிக்க நாளொரு பொழுதாகச் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள் என்ன இருண்ட கண்டத்திலா அந்தரிக்கிறார்கள்? இன்று அஞ்சி ஓடி அவலப்பட்டுச் செத்து மடிபவர்கள் யார்?? அவர்கள் யாரிடம் வேண்டுகை வைப்பார்கள்?



‘நேற்று வரை உலகம் அவர்களையே அதிகமாகப் பேசியது.
வன்னியில் நிமிர்ந்துள்ளோர் என்று உற்றுப் பார்த்து உறவாடியது.
ஆனால் இன்றோ??? அழியட்டும் அவர்கள் என ஆழத் துயில் கொள்கிறது??? என்ன செய்யும் உலகம் எங்கள் உறவுகளுக்கு??



’கையெடுத்த கடவுளருமே ஈழத் தமிழர்களுக்குக் கை கொடுக்கவில்லை?
அப்பமாக, அவல் பொரியாக, மோதகமாக வாங்கி உண்ட கடவுளர்
ஈழத் தமிழரைக் கைவிட்டு விட்டனராம்?
உலகம் மட்டும் இன்று உறக்கத்தில் இருக்கிறதாம்?? விடுதலை வேண்டியவர்களைப் பயங்கரவாதம் என்று சொல்லி வீர முழக்கமிடுகிறதாம் உலகம்? இது என்ன வேடிக்கை பாருங்களேன்??



’பாதுகாப்பு வலயத்திலும் பதுங்கு குழிகள்?
பாதுகாப்பு வலயம் என்பதன் அர்த்தம் என்ன?
ஓ அப்படியாயின் பதுங்கு குழிகளும் உயிர் பறிக்கும் குழிகள் தானே??



உலகம் எல்லாம் வாய் நிறையப் புன்னகையோடு வாழும் மனிதர்களே?
எப்படி வாய் நிறைய அழுகிற இந்த மனிதர்களைப் பார்க்க முடிகிறது உங்களால்??
என்ன செய்யப் போகிறீர்கள்?
கரங் கொடுத்து இவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டீர்களா??
இவர்களின் வாழும் உரிமையை வரமளிக்க மாட்டீர்களா?
இவர்கள் பட்டினியில் சாக ஒரு பிடி உணவையேனும்
உங்களால் ருசித்து உண்ண முடியுமா??
மனிதர்களின் மனச் சாட்சி அதற்கு இடம் தருமா??


உலகம் இதயமின்றி இரங்க மனமின்றி இறுமாப்போடு இருக்கிறதாம்?? யாரிடமும் சொல்லி அழ முடியாதுள்ளவர்கள் வேறிடம் சென்று வாழ மாட்டார்கள்??
’சொந்த நிலத்தில் குந்தி இருக்க ஓர் குடி நிலம் கேட்பது தப்பா?? யாரும் ஏதும் சொல்லாமல் உறங்கிக் கிடக்கிறீர்கள் போலும்??? அழியும் நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்??


மீண்டும் அவர்களின் வாசற் கதவுகள் திறக்கப்படும்! மீண்டும் ஆண்ட பரம்பரை தேராவில் வீதியிலும், ஆனையிறவுப் பெரு வெளியிலும், அம்பகாமத்திலும் அச்சமின்றி அகலக் கால் வைக்கும்? இதுவெ உலக நியதி? இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் என எல்லோர் முகங்களும் புன்னகை புரியலாம்? இன்னும் இருப்பது ஐந்து கிலோமீற்றர்கள் தூரமே என இசைப்பாட்டும் இயற்றிப் பாடலாம்? குண்டு துளைப்பினும் பிரபாகரன் படைகள் சாகமல் குறி தவறாமல் தாக்குகிறார்கள் எனப் பெரும் கோசமும் எழும்பலாம்?? வந்த பகையை நிச்சயமாய்த் தமிழன் வெல்லுவான் என்பதும் நாளை ஓர் வரலாறாக மாறலாம்???



தர்மம் அழிந்ததாகவோ, அதர்மம் மோலோங்கியதாகவோ இது வரை யாரும் இலக்கணம் சொன்னதில்லை??? தர்மம் வெல்லும் என்பது வரலாறு??



‘இப்போது இங்கு வரும் காட்சிகளை நீங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தோ
மெத்தையில் இருந்தோ பார்த்து மகிழலாம்?



புலிகள் எப்போது அடிப்பார்கள்? என நானும் நீங்களும் புலத்தில் இருந்து புதிய கவிதைக்கான தலைப்பும் தேடலாம்????


புலிகள் அடிக்கையில் கொடியோடு வீதியில் இறங்கி வீராவேசம் காட்டப் புலத்தில் இருந்து நானும் நீங்களும் புறப்படலாம்??



குளிரூட்டிய அறைக்குள் இருந்து நானும் நீங்களும் புலிகள் அடித்தால் மகிழ்ச்சியாகவும், அடிக்கவில்லை என்றால் துக்கமாகவும் எங்கள் காலத்தைக் கழிக்கலாம்???



‘வன்னிக் குழந்தையாயிற்றே என்று வகை பிரித்து இந்தத் துயர் நிறைந்த காட்சிகளைக் கண்டு உலகம் தூங்கியிருக்கலாம்??? அவர்கள் காத்திருக்கிறார்கள் தங்கள் சொந்த ஊரிற்குப் போவதற்காக?? அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் உலகத்து மனிதர்களைப் போலத் தாமும் உரிமையோடு வாழ்வதற்காக?? வழிகளைத் திறவுங்கள் உலகத்து மனிதர்களே இவர்களுக்காக??



அடக்கு முறைக்கு எதிராகப் போராடியவர்கள் வீழ்ந்ததாக வரலாறு இல்லை.. நாளை நானும் நீங்களும் புலிகள் அழிந்து விட்டால் புலம் பெயர் வாழ்வின் பரவசத்தில் எம்மை நாமே மறந்து, வரலாறுகளைத் தொலைத்தவர்களாய் வண்ண வண்ணக் கனவுகளோடும் வலம் வரலாம்? ஆனால் அடக்கப்பட்ட இனத்திலிருந்து மீண்டும் ஓர் பிள்ளை பிறப்பான்? அவன் பனங்காம மண்ணுள், வன்னிக் காட்டுப் பற்றைகளுக்குள் புதைந்துள்ள துப்பாக்கியினைத் தேடி எடுப்பான்? அவனிலிருந்தும் மீண்டும் ஒரு சரித்திரம் ஆரம்பமாகும்?? அவன் மீண்டும் தன் முந்தையர் வீரத்தை நிலை நிறுத்தப் புறப்படுவான்?



அப்போது நானும், நீங்களும் எங்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இனி எப்போது புலிகள் அடிப்பார்கள்? எத்தனை ஆமி செத்தவனாம் என்று கேட்டு இன்ரநெற்றைத் தட்டிக் கொண்டிருப்போம்? அட விழுந்தாலும் இவர்களுக்கு மீசையிலை மண் ஒட்டவேயில்லை என்று றம்புக்வெலவினதும், கோத்தபாய, மகிந்தவினதும் வம்சக் குழந்தைகள் மீண்டும் ஓர் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் எஞ்சியுள்ள மெலிவதற்கு இடமுமின்றி, பட்டினியால் வாடி, எலும்பும் தோலுமாக உள்ள தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பார்கள்??



உலகம் அப்போது தான் விழித்துக் கொள்ளும்? பழைய விண்டோஸ் விஸ்டாவில் பதியப்பட்ட வன்னிப் படுகொலைகளைத் தூசு தட்டிப் பார்த்து விட்டு ‘அட நாங்கள் எல்லோரும் பிழை விட்டு விட்டோம்? எங்கள் முந்தையர்களாவது தமிழர்களுக்குத் தனி நாட்டினைக் குடுத்திருக்கலாம்?? விழுந்தாலும் மானத்தோடு விழுபவன் தமிழன் அல்லவா?? இனிமேலும் தமிழர்களைப் பணியவைக்க முடியாது என்று சொல்லி தங்கள் மூதாதையர் தமிழர்களின் தனி நாட்டினைக் கண்டு கொள்ளவில்லையே என மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுத் தமிழர்களுக்கென்று தனி நாட்டினை வழங்கி உலகம் மகிழ்வெய்தும்?? அப்போது நான் என்ன செய்வேன்?? நீங்கள் என்ன செய்வீர்கள்?? ‘பிஸ்ணஸ் கிளாஸில்(Bussiness Class) பிளைட் ரிக்கற் புக் பண்ணிக் கிளிநொச்சிக்குச் சென்று இப்போது உள்ள வன்னிப் படுகொலைகள் நிறைந்த வீடீயோக்களும், சண்டைக் காட்சிகளும் கலந்த திரைப்படம் திரையிடப்படுகையில் பின்னிருக்கையில் அமர்ந்து விசிலடித்துப் பார்த்து மகிழ்வோம்?? இது தானே எம்மால் முடிந்தது??? சீ....தூ.....
(இன்னும் ஒரு இரண்டு மாசம் பொறுங்கோ?? இதில் உள்ள நிறைய விடயங்கள் உங்களுக்குப் போகப் போகப் புரியும்??????)



‘அடங்கா மண்ணுக்கு விலங்கிடுதல் சாத்தியமோ??
பனங்காம மண் பணிந்ததாக வரலாறும் உண்டோ???



’வேரிழந்து ஊரிழந்து ஓடி வந்தவர்- நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்??
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் எல்லைப்
போரின் படையாகிப் புலியோடு நின்றவர்??
எம் தலைவா எங்களுடன் நின்று எடுப்பாய்- மீண்டும்
எங்கள் ஊரில் சென்று வாழ வென்று கொடுப்பாய்???
ஆவி உடல் யாவும் உமக்காகக் கொடுப்போம்-தம்பி
அச்சமின்றி உம் அருகில் என்றும் இருபோம்???



எனும் பாடல் காற்றில் கலந்து கந்தகத்துகள்களின் வாசனைகளின் நடுவே பரவும் ஓர் நாள்??



வாழ்வளித்த வன்னி மண்ணே உன்னைக் கொஞ்சவா- நாங்கள்
பட்ட கடன் உந்தனுக்குக் கொஞ்ச நஞ்சமா??
...................................
மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம்- எங்கள்
ஊரில் ஏறி வந்த பகை யாவும் துடைப்போம்
நாளை தமிழ் ஈழம் என நம்பியிருபோம்
அந்த நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்..!

எனும் புதுவையின் பாடலும் மொழிபெயர்ப்பு இலக்கிய வரிசையில் தனக்கென ஓர் தன்யிடத்தையும் பிடிக்கலாம்??? என்ன ஏதாவது புரிகிறதா?? போகப் போகப் புரியும்??

Thursday, March 26, 2009

தேர்தல் திருவிழாவில் தமிழகம்: வன்னியில் வான், தரைப் படையினர் இணைந்து கொடூரத் தாக்குதல்: 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை

தேர்தல் திருவிழாவில் களைகட்டும் தமிழகமே!!! பார் உன் உறவுகளை!!!

வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இப்பகுதிகளை நோக்கி இன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்டதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

அத்துடன் மாத்தளன் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இதே பகுதியில் மாத்தளன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையே இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவிலான தாக்குதல்கள் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களும் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டன.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இன்றைய தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]


[படம்: புதினத்துக்காக சகிலா]

கொல்லப்பட்ட ஏனையோரின் பெயர் விபரம் வருமாறு:

கந்தையா சுப்பையா (வயது 60)

செல்லத்துரை (வயது 77)

தினகரன் யாழியன் (வயது ஐந்தரை மாதம்)

பெருமாள் ரவிக்குமார் (வயது 28)

ரவீந்திரன் பிரியா (வயது 08)

தம்பையா (வயது 74)

பொன்னம்பலம் சிறீலக்சுமி ரஞ்சன் (வயது 52)

மாதவன் செல்லப்பா (வயது 65)

தியாகராசா நிசாந்தன் (வயது 19)

இராமகிருஸ்ணன் மேரி ஜெயசாந்தினி (வயது 09)

தம்பு மயில்வாகனம்  (வயது 82)

பசுபதி சுதாகரன் (வயது 23)

தம்பு சுப்பிரமணியம் (வயது 74)

சந்தனம் காளியரத்னம் (வயது 59)

நவரட்ணம் நேசமலர் (வயது 52)

கந்தையா சுப்பையா (வயது 74)

விக்கி கண்ணம்மா (வயது 42)

செல்வராசா ராசம்மா (வயது 70)

தவக்குமார் டிந்து (வயது 09)

மார்க்கண்டு சசிகரன் (வயது 23)

சத்தியமூர்த்தி கௌரியம்பாள் (வயது 45)

சாரங்கன் தட்சாயினி (வயது 12)

வெள்ளைச்சாமி விதுசா (வயது 07)

நகுல்ராஜ் கிருஸ்ணரஜனி (வயது 35)

பரமேஸ்வரன் ஜெயரஞ்சனி (வயது 52)

அமிர்தலிங்கம் டிலக்சன் (வயது 10)

இராசேந்திரம் பிரதீபன் (வயது 29)

மதனவசீகரன் பிரவீணா (வயது 03)

ஆறுமுகம் கலைவாணன் (வயது 13)

மருதமலை தமிழினியன் ( வயது 05)

முருகாண்டி நிதியிம்பன் (வயது 06)

காளிதாசன் காவியன் (வயது 07)

மருதன் (வயது 08)

தேவசகாயம் கார்நிலா (வயது 10)

மலையாண்டி குபேரன் (வயது 14)

கிருபைராசா குமாரி (வயது 33)

தேவதாஸ் கார்த்திகாயினி (வயது 15)

ஏழுமலை கிருநாந்தி (வயது 13)

பார்த்திபராஜா பார்கவி (வயது 14)

தேவிதாசன் காவியா (வயது 13)

கதிரித்தம்பி இந்திரலிங்கம் (வயது 31)

சர்வானந்தகரன் நிசாந்தினி (வயது 24)

சே.ருக்குமணி (வயது 52)

மா.சசிகுமார் (வயது 23)

சு.பாலசிங்கம் (வயது 56)

ந.சோனியா (வயது 18)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயா் விபரம் கிடைக்கப்பெறவில்லை.


[படம்: புதினத்துக்காக சகிலா]

Monday, March 23, 2009

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை; துப்பாக்கிச் சூடு: 102 பொதுமக்கள் படுகொலை; 140 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். 

மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை தொடக்கம் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நெக்கோட் நிறுவனப் பணியாளரும் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இதேவேளையில் மாத்தளன் பகுதியை நோக்கி இன்று காலை தொடக்கம் இரவு 7:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோர ஆட்லெறி எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டும் 68 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை மற்றும் அதன் தலைமைப் பணியகம் களஞ்சியம் ஊர்திகள் தரித்து நின்ற பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. அவை பெரும் அழிவுகளுக்கு உட்பட்டன. மேலும் நிவாரணம் பெற வந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரம் வருமாறு:

து.நாகேஸ்வரி (வயது 26) 
வீ.நெல்சன்குமார் (வயது 34) 
வீ.உதயசேகர் (வயது 43) 
சு.பாலசுப்பிரமணியம் (வயது 34) 
சு.பாலசிங்கம் (வயது 45) 
த.தருமலட்சுமி (வயது 60) 
சு.மாரி (வயது 52) 
கே.ரஜனிகாந்த் (வயது 29) 
மோ.தர்சிகன் (வயது 06) 
க.பஞ்சலிங்கம் (வயது 50) 
தா.அற்புதம் (வயது 60) 
தா.ஸ்ரீஸ்கந்தராசா (வயது 47) 
ப.சந்திராதேவி (வயது 40) 
வே.ஆறுமுகம் (வயது 75) 
வெ.குஞ்சுப்பனி (வயது 76) 
சி.சண்முகநாதன் (வயது 57) 
கா.கலைவரதராசா (வயது 54) 
வீ.சசிதரன் (வயது 38) 
ல.சசிதரன் (வயது 37) 
த.யோகமணி (வயது 36) 
தே.தேவசகாயம் (வயது 59) 
தே.அமராவதி (வயது 49) 
கு.நாகேஸ்வரன் (வயது 21) 
கே.ரஞ்சித் (வயது 28) 
யோ.தர்சிகா (வயது 06) 
கி.காவியா (வயது 30) 
வி.செல்லையா (வயது 78) 
செ.மாரிமுத்து (வயது 88) 
சே.தவராசா (வயது 45) 
த.கௌரி (வயது 25) 
ம.தேனுஜா (வயது 03) 
ந.ஜதுர்சிகன் (வயது 02 மாதங்கள்) 
செ.லக்சனா (வயது 08 மாதங்கள்) 
த.விபுசன் (வயது 13) 
ச.கல்பனா (வயது 05) 
செ.லக்சனா (வயது 08) 
சிறீ.நிலானி (வயது 13) 
மி.மரியமலர் (வயது 13) 
க.துசியந்தன் (வயது 10) 
சு.யதீஸ்வரன் (வயது 04) 
சு.ஜனதீசன் (வயது 07) 
சு.சந்திரகலா (வயது 17) 
நீ.பாலகுமார் (வயது 11) 
சி.கலைவாணி (வயது 35) 
இ.கண்மணி (வயது 74) 
க.ரீற்றா (வயது 47) 
வீ.வீரம்மா (வயது 60) 
கி.கணேசராசா (வயது 35)  ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உலக உணவுத்திட்ட நிவாரணப் பொருட்கள், பொருட்களை ஏற்றி-இறக்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றும் சுமையூர்திகள், உழுவூர்திகள் என்பனவும் சிறிலங்கா படையினரின் இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுற்றுள்ளன.

Friday, March 13, 2009

படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலை, விநியோக மையங்கள் மீது எறிகணை தாக்குதல்: 31 பேர் பலி; பலர் காயம்

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள புதுமாத்தளன் வைத்தியசாலை மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் திரும்பவும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று சுமார் 3.00 மணியளவில் படையினரால் நடாத்தப்பட்ட ஆட்லறித் தாக்குதலின் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கக் கப்பலில் உணவுப் பொருட்களை இறக்கி களஞ்சியப்படுத்தும் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு வலய பகுதிகள் மீது சிறிலங்கா படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மொத்தமாக 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எறிகணைத் தாக்குதல்கள் வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் மற்றும் மாத்தளன் ஆகிய பகுதிகளின் மீதே நடாத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா வான்படையின் இரண்டு போர் விமானங்கள் நீரேரி பகுதியில் 24 குண்டுகளை வீசியுள்ளன. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.