முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலை 6:50 நிமிடமளவிலும் இரவு 8:25 நிமிடமளவிலும் இரவு 9:50 நிமிடமளவிலும் தொடர்ச்சியாக எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர். இதில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
|
No comments:
Post a Comment