| பாரத தேசமே பார் என்மக்களை!!! என் தாய் தமிழகமே...பார் உன் உடன்பிறப்புக்களை... வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று செவ்வாயக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். |
அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகள் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டுத் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். பாலகுமார் விதுசா (வயது 14) விக்கினேஸ்வரன் கஜனி (வயது 07) வள்ளிபுனத்தில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். |
Tuesday, February 17, 2009
சிறிலங்கா கொடுங்கோல் அரசின் தமிழ் இனப் பலி தொடர்கிறது : வன்னியில் இன்றும் (செவ்வாய்) 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment