போதுமினி எல்லாள போர் முகம் கொள்க....
'சுதந்திர தினம்'
ஐரோப்பியச் சாபம் நீங்கிய
விமோசனம் நிரம்பிய நாளாய்
1948 இலங்கையின்
இறைமையும் உரிமையும்
இறையழித்த வரமான
உரிமைகள் தினம்.
பிரிவினை வேண்டாம் - உடன்
பிறப்புகள் நாங்கள்
பிரிகிலோம் என்றும்
புத்தரும் சிவனும்
அல்லாவும் யேசுவும்
எமக்கென்றுமே பொதுவென
உரைத்தவர் எங்கே ?
தோண்டுக அவர் புதை குழிகளை....
சிங்களன் தமிழன்
உயிர் எடுத்திடும் பகைவன்
என்றதை போய்ச் சொல்க.
பாழுயுயிர் தொலைந்து
ஐக்கிய இலங்கைக்குள்
ஆழுவோம் என்றவர்
ஆவிகள் மீளப் பிறந்தெம்
அவலம் புரிய....
அவர்களைத் தோண்டுங்கள்...!
வரலாற்று எச்சங்களாய் - எம்
வாழ்வைச் சிங்களன் கையில்
வைத்துச் சென்ற
வஞ்சகர் நினைவுகள்
சின்னங்கள் எதுவுமே
எமக்கினி வேண்டாம்.
எல்லாளன் வரட்டும் - எம்
எல்லைகள் தொட்ட
துட்டகெமுனுவின் வில்லாளும்
வீடெங்கும் தீயாகி எழுக.
தமிழுயிர்களின்
மூச்சுக்காற்றிலவர்
பொசுங்கிப் போக
வரட்டும் எல்லாளன்.
அனுராதபுர தெற்கு வாசலில்
அநாதையான உனது நினைவிடம்
இனித் தமிழரின் உறைவிடம் ஆகுக.
இலங்கை முழுமையும்
ஈழத் தமிழனின் நிறங்கள் காண
நீள் துயில் கலைத்து நிமிர்க....
போர் விதி பொது விதி
எதுவித அறிவிப்புமின்றி
எங்களின் நிலத்தை அவர்கள் உழுவதும்
உலகெங்கும் அழுவதுமாய் நாங்கள்
போதுமினி....
எல்லாள போர் முகம் கொள்க....
பூமிப்பந்தின் விசையாவும்
புத்தரின் பெயரால் மகிந்தரின்
பசில் , கோத்தபாய
கொள்ளையர் வசமாய்
கொழுத்துக் கிடக்கிறது.
தனித்த இனமாய்
தமிழரின் விதி இனியும்
தார்மீகமாய் தர்மமாய்
ஒரு மண்ணாயும் வேண்டாம்
எல்லாள நீ எழுக
வில்லோடு வீரப்பலம் கூட
நீ வீச்சுக் கொள்க.
தமிழர் விடுதலை வென்று வருக....
போராட உன்னோடு பலமாகி
உயிர் எறிய முடியாத் தொலைவில்
நாங்கள் இருப்பினும்
சமபலம் என்பதன் குணம்
உணர்த்தும் கொடிகளோடு
உலகின் திசையெங்கும்
ஓங்கியொலிப்போம்.
நீ வென்று வரும் வரை
ஓயாது உழைப்போம்.
போதுமினி எல்லாள போர் முகம் கொள்க....
04.02.09 (இன்று இலங்கையின் 61வது சுதந்திரதினம்)
'சுதந்திர தினம்'
ஐரோப்பியச் சாபம் நீங்கிய
விமோசனம் நிரம்பிய நாளாய்
1948 இலங்கையின்
இறைமையும் உரிமையும்
இறையழித்த வரமான
உரிமைகள் தினம்.
பிரிவினை வேண்டாம் - உடன்
பிறப்புகள் நாங்கள்
பிரிகிலோம் என்றும்
புத்தரும் சிவனும்
அல்லாவும் யேசுவும்
எமக்கென்றுமே பொதுவென
உரைத்தவர் எங்கே ?
தோண்டுக அவர் புதை குழிகளை....
சிங்களன் தமிழன்
உயிர் எடுத்திடும் பகைவன்
என்றதை போய்ச் சொல்க.
பாழுயுயிர் தொலைந்து
ஐக்கிய இலங்கைக்குள்
ஆழுவோம் என்றவர்
ஆவிகள் மீளப் பிறந்தெம்
அவலம் புரிய....
அவர்களைத் தோண்டுங்கள்...!
வரலாற்று எச்சங்களாய் - எம்
வாழ்வைச் சிங்களன் கையில்
வைத்துச் சென்ற
வஞ்சகர் நினைவுகள்
சின்னங்கள் எதுவுமே
எமக்கினி வேண்டாம்.
எல்லாளன் வரட்டும் - எம்
எல்லைகள் தொட்ட
துட்டகெமுனுவின் வில்லாளும்
வீடெங்கும் தீயாகி எழுக.
தமிழுயிர்களின்
மூச்சுக்காற்றிலவர்
பொசுங்கிப் போக
வரட்டும் எல்லாளன்.
அனுராதபுர தெற்கு வாசலில்
அநாதையான உனது நினைவிடம்
இனித் தமிழரின் உறைவிடம் ஆகுக.
இலங்கை முழுமையும்
ஈழத் தமிழனின் நிறங்கள் காண
நீள் துயில் கலைத்து நிமிர்க....
போர் விதி பொது விதி
எதுவித அறிவிப்புமின்றி
எங்களின் நிலத்தை அவர்கள் உழுவதும்
உலகெங்கும் அழுவதுமாய் நாங்கள்
போதுமினி....
எல்லாள போர் முகம் கொள்க....
பூமிப்பந்தின் விசையாவும்
புத்தரின் பெயரால் மகிந்தரின்
பசில் , கோத்தபாய
கொள்ளையர் வசமாய்
கொழுத்துக் கிடக்கிறது.
தனித்த இனமாய்
தமிழரின் விதி இனியும்
தார்மீகமாய் தர்மமாய்
ஒரு மண்ணாயும் வேண்டாம்
எல்லாள நீ எழுக
வில்லோடு வீரப்பலம் கூட
நீ வீச்சுக் கொள்க.
தமிழர் விடுதலை வென்று வருக....
போராட உன்னோடு பலமாகி
உயிர் எறிய முடியாத் தொலைவில்
நாங்கள் இருப்பினும்
சமபலம் என்பதன் குணம்
உணர்த்தும் கொடிகளோடு
உலகின் திசையெங்கும்
ஓங்கியொலிப்போம்.
நீ வென்று வரும் வரை
ஓயாது உழைப்போம்.
போதுமினி எல்லாள போர் முகம் கொள்க....
04.02.09 (இன்று இலங்கையின் 61வது சுதந்திரதினம்)
No comments:
Post a Comment