இந்த கோரிக்கையை அவர், இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்துள்ளார். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு சர்வதேச உத்தரவாதம் கிடைக்குமானால் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் என்ற விடயத்திற்கு அவசியம் இருக்காது என்றும் நடேசன் நேற்று விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர் ஜோசே மனுவல் பரோசோ, ஐ.நா. சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன், நோர்வே பிரதம மந்திரி ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் ஜப்பான் பிரதம மந்திரி ரறோ அஸோ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்களின் தாயகமாகும். இந்தநிலையில் கடந்த 50 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து 25 வருடங்கள் சாத்வீக போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் அது இலங்கை அரசாங்கத்தினால் அடக்கப்பட்டது. அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளும் தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் நடத்தப்பட்டன. தமிழர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவர்களின் வாக்குகள் மூலம் தமது அரசியல் இலக்கான சுதந்திர நாடு மற்றும் வடக்கு கிழக்கு தாயகம் என்பவற்றை உலகத்திற்கு அறிவித்தனர். இந்தநிலையில் தமிழ் மக்களின் தீர்ப்பை தமது தேசிய கடமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றதாக நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் முன்னிலையில் உள்ளபோது இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வருவதும் பின்னர் அந்த பேச்சுவார்த்தை காலத்தில் தமது இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு செல்கின்ற நடைமுறையை மேற்கொண்டு வந்துள்ளதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது 1985 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கம் எப்போதுமே இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்ததே தவிர அரசியல் தீர்வில் நாட்டம் கொள்ளவில்லை இந்தநிலையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக எனத் தெரிவித்து மனிதாபிமான பணியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றியது. அத்துடன் சிங்கள படையினரால் தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டமையை சுட்டிக்காட்டியவர்கள், பயங்கரவாதிகள் அல்லது வெள்ளைப்புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டனர் ஹிட்லர் அரசாங்கத்தில் இருந்து ருவன்டா மற்றும் சூடான் அரசாங்கம் வரை இனப்படுகொலைகளை மேற்கொண்டன. அதேபோல தான் இலங்கை அரசாங்கமும் 1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை ஆரம்பித்து இன்று வரை சுமார் இரண்டு இலட்சம் பேரை படுகொலை செய்துள்ளது. வன்னியில் இலங்கைப்படையினர் எறிகணைகளையும், பல்குழல் பீரங்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக பெண்கள் சிறுவர்கள் உட்பட்ட பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரையிலான மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டனர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என எதிர்பார்க்கின்ற வேளையில் தமிழ் மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன. |
Monday, February 23, 2009
ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதற்கு முன்னர், போர் நிறுத்தத்தையும் நிரந்தர தீர்வையும் சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: விடுதலைப்புலிகள்
Labels:
Tamil,
Tamil Nadu,
tamileelam,
தமிழீழ விடுதலைப்புலிகளின்,
போர் நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment