| வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். |
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவன்பொக்கணை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் அதிகாலை தொடக்கம் அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 25 சிறுவர்கள் உட்பட 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நெக்கோட் நிறுவனப் பணியாளரும் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் மூவரும் அடங்குகின்றனர். இதேவேளையில் மாத்தளன் பகுதியை நோக்கி இன்று காலை தொடக்கம் இரவு 7:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோர ஆட்லெறி எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டும் 68 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இடைவிடாது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியானதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் இப்பகுதியில் காயமடைந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை மற்றும் அதன் தலைமைப் பணியகம் களஞ்சியம் ஊர்திகள் தரித்து நின்ற பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. அவை பெரும் அழிவுகளுக்கு உட்பட்டன. மேலும் நிவாரணம் பெற வந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் இன்று மாலை வரை அடையாளம் காணப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரம் வருமாறு: து.நாகேஸ்வரி (வயது 26) இதேவேளையில் கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உலக உணவுத்திட்ட நிவாரணப் பொருட்கள், பொருட்களை ஏற்றி-இறக்க அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவால் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றும் சுமையூர்திகள், உழுவூர்திகள் என்பனவும் சிறிலங்கா படையினரின் இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுற்றுள்ளன. |
Monday, March 23, 2009
வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை; துப்பாக்கிச் சூடு: 102 பொதுமக்கள் படுகொலை; 140 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment