| வன்னிப்பெரு நிலப்பரப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 57 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். |
இதில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர். உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படகின் மூலம் நேற்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கரையோரத்திற்கு வந்தபோது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளனர். க.நாதன் (வயது 44) சம்பவ இடத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளையில் அனைத்துலக சங்க பிரதிநிதிகள் கரைக்கு வந்த போது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மக்களை கொல்கின்ற சிறிலங்கா படை எறிகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சை புல்மோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சோ.சிந்துஜன் (வயது 14) அம்பலவன்பொக்கணை மற்றும் பச்சைபுல்மோட்டை பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நேற்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. சி.இரத்தினம் (வயது 70) இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டிய 5 பொதுமக்கள் நேற்று உயிரிழந்துள்ளனர். ஞ.யோகேஸ்வரன் (வயது 22) அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். |
Friday, March 13, 2009
வன்னியில் சிறிலங்கா படையினர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: நேற்றும் நேற்று முன்தினமும் 57 தமிழர்கள் படுகொலை; பலர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment