Sunday, February 15, 2009
புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்க படுகின்ற போராட்டங்கள் பற்றிய எனது பார்வை.
சில காலங்களுக்கு முன்னர் வரவேண்டிய இந்த எழுச்சி எமது ஈழ மக்களின் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு பிறகுதான் புலம்பெயர் தமிழர்களை பேர் எழுச்சி பெற வைத்திருக்கிறது.. கவனஈர்ப்புக்கள் , மனித சங்கிலி போராட்டங்கள் ,இணையத்தள பிரச்சாரங்கள் என பலவழிகளில் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதற்க்கு கிடைக்கின்ற ஆதரவு மிகவும் குறைவாகவே இருக்கிறது.உதாரணமாக 10000 ஈழ தமிழர் உள்ள நாட்டிலே பேர் ஒரு போராட்டத்தில் 1000 கலந்துகொள்கிற பொது அது ஒரு சதவிகத்மாகவே உள்ளது.. இந்த நிலை மாறவேண்டும்.நேரமின்மை, வேலைப்பழு மற்றும் இதர காரணங்களை சொல்லி தட்டிக்களித்தாலும் அங்கு வன்னி மக்கள் படுகின்ற சொல்லெனா துயரங்களை ஒப்பிட்டு பார்கையில் ஒரு வாரத்தில் ஒரு நாளை அவர்களுக்க ஒதுக்குவது என்பது எமக்கு பெரிய விடயம் அல்ல....இவ்வளவு இருந்து தற்போது பலதரப்பட்ட போராட்டங்களை பல்கலை கழக, பாடசாலை மாணவர்களாலேயே அதிகம் முன்நெடுகப்படுகின்றது. அதில் கலந்துகொள்கின்ற வயதுவந்தவர்களின் தொகை குறைவாக காண்ப்படுகின்றதாகவே எனது பார்வை அமைந்துள்ளது.... என்ன இருந்தாலும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளின் போராட்டங்கள் எமது மக்களின் இன்னலைகளை குறைக்குமாக இருந்தால் அதுவே போதும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment